T20 கிரிக்கெட்டில் எந்த இந்தியரும் செய்யாத சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்
T20 கிரிக்கெட்டில் எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார்.
ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா
2025 ஆசிய கோப்பையின் நேற்றைய போட்டியில், இந்தியா மற்றும் ஓமன் அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 56 ஓட்டங்கள் எடுத்தார்.
189 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து, 167 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம், இந்திய அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
அர்ஷ்தீப் சிங் சாதனை
இந்த போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
அர்ஷ்தீப் சிங், 4 ஓவர்கள் வீசி 37 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து, 1 விக்கெட் கைப்பற்றினார்.
இதன் மூலம், சர்வதேச T20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மேலும், அதிவேகமாக 100 T20 விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். 64 போட்டிகளில் விளையாடி, அர்ஷ்தீப் சிங் 100 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் 53 போட்டிகளிலும், இலங்கை வீரர் ஹசரங்கா 63 போட்டிகளிலும் இந்த சாதனையை படைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |