75 ரன்னுக்கு சுருண்ட அணி! புயலாக தாக்கிய அர்ஷ்தீப் சிங்..6 ஓவர்களில் இலக்கை எட்டிய பஞ்சாப்
விஜய் ஹஸாரே கிண்ணத் தொடர் போட்டியில் பஞ்சாப் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிக்கிமை வீழ்த்தியது.
மிரட்டிய அர்ஷ்தீப் சிங்
ஜெய்ப்பூரில் சிக்கிம் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.
🚨 Arshdeep Singh's Show in Vijay Hazare Trophy.
— Tejash (@Tejashyyyyy) January 3, 2026
10/34/5 - He picked 5 wickets against Sikkim and gave just 34 runs.
He is the most valuable asset for the Indian team for the T20 World Cup. Hope he will continue his golden form Indian team 🔥🫡pic.twitter.com/4azKvxmaJm
பஞ்சாப் அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்ய, சிக்கிம் அணி முதலில் துடுப்பாடியது.
அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh), மார்கண்டே மற்றும் பாஜ்வா ஆகியோரது மிரட்டலான பந்துவீச்சில் சிக்கிம் அணியின் விக்கெட்டுகள் சரிந்தன.
பிரப்சிம்ரன் சிங் அதிரடி
22.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த சிக்கிம் அணி 75 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக பல்சோர் 13 ஓட்டங்களும், சப்டுல்லா 10 ஓட்டங்களும் எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சுக்தீப் பாஜ்வா, மார்கண்டே தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 6.2 ஓவர்களில் 81 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
பிரப்சிம்ரன் சிங் (Prabhsimran Singh) 26 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்களும், ஹர்னூர் சிங் 22 (13) ஓட்டங்களும் விளாசினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |