லண்டனில் ஊடக நிறுவனம் மீது தீவைப்பு முயற்சி: 3 பிரித்தானியர்கள் கைது
லண்டனில் ஊடக நிறுவனம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தீவைப்பு தாக்குதல் முயற்சியில் 3 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லண்டனில் ஊடக நிறுவனம் மீது தீவைப்பு முயற்சி
வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள Volant Media என்ற ஊடக நிறுவனத்தின் பார்க் ராயல் தலைமையகத்தை குறிவைத்து புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு எரிபொருள் நிரப்பப்பட்ட போத்தல் பாட்டில் தீ வைக்கப்பட்டு வீசப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த தீ வைக்கப்பட்ட போத்தல் பாட்டிலானது வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கட்டிடத்திற்கு சேதம் ஏற்படவில்லை.

தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் கருப்பு நிற SUV ரக காரில் தப்பி சென்றுள்ளனர்.
காவல்துறையினர் அறிவுறுத்தியும் வாகனத்தை நிறுத்தாததால் ஆயுதம் ஏந்திய அதிரடி படையினர் கருப்பு நிற காரை துரத்திச் சென்றனர்.
தாக்குதல் நடத்தியவர்களின் வாகனம் வடக்கு லண்டனின் வுட்பெர்ரி கார்டன்ஸ் சந்திப்புக்கு அருகே விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த துரத்தல் நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் பிரித்தானிய குடிமக்கள் ஆவார்கள்.
வெள்ளிக்கிழமை அவர்கள் மீது அதிகாரப்பூர்வ குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |