தமிழ் சினிமாவின் முக்கிய கலை இயக்குனர் மரணம்
தமிழ் சினிமாவின் முக்கிய கலை இயக்குனர்களின் ஒருவரான சந்தானம் மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியவர் சந்தானம்.
தொடர்ந்து தெய்வ திருமகள், இறுதிச்சுற்று படங்களுக்கும் பணியாற்றினார், ரஜினியின் தர்பார், விஜய்யின் சர்கார் படங்களுக்கும் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இதுமட்டுமின்றி ப்ரொடக்ஷன் டிசைனராகவும் பணியாற்றியுள்ள சந்தானம் திடீர் மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.