பதவி விலகும் மிக்கி ஆத்தர்! இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் குறித்து கசிந்த தகவல்
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து தான் விலக உள்ளதை மிக்கி ஆத்தர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட் அணியான டெர்பிஷர் சிசிசி, கிளப்பின் புதிய கிரிக்கெட் தலைவராக மிக்கி ஆத்தர் நியமிக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவித்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, தான் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக உள்ளதை ஆத்தர் உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்குப் பிறகு இலங்கையுடனான எனது பயணம் முடிவுக்கு வருவது மிகவும் வருத்தமாக இருக்கிறது!
?????? ?????? ????? #????
— Derbyshire CCC (@DerbyshireCCC) November 17, 2021
We are delighted to announce the appointment of @Mickeyarthurcr1 as Head of Cricket ?
Welcome to Derbyshire, Mickey! ?
Read ⤵️
இந்த சிறந்த நாட்டிற்கு பயிற்சியளிக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் விரும்பினேன்! வீரர்களுக்கும் இலங்கை மக்களுக்கும் ஒரு பெரிய நன்றி!
நான் என் பயணத்தை தொடங்கிய காலத்தை விட இப்போது இலங்கை கிரிக்கெட் சிறந்த இடத்தில் உள்ளது என்பது எனக்குத் தெரியும் என ஆத்தர் ட்விட் செய்துள்ளார்.
Sad that it is the end of the road with SL after the WI test series!I have loved every minute of coaching this great country!To the players and people of SL a big thank you!
— Mickey Arthur (@Mickeyarthurcr1) November 17, 2021
I know SL cricket is in a better place now than when I started!
ஆத்தருக்கு பதிலாக இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஜெயவர்த்தனே நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.