செயற்கை தங்கம் வந்துவிட்டது..! வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை?
அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று செயற்கை தங்கத்தை உருவாக்கும் முறையை கண்டுபிடித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
தங்கத்தின் மீதான ஆர்வம்
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் தினசரி பலரது கவனத்தையும் ஈர்க்கும் ஒரு தலைப்பாக உள்ளது.
நாம் வாங்குகிறோமோ இல்லையோ, தங்கம் விலை ஏறினால் கவலைப்படுவதும், குறைந்தால் நிம்மதி அடைவதும் ஒரு பொதுவான மனநிலையாக மாறிவிட்டது.
இந்த சூழலில்தான் செயற்கை தங்கம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. இது பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
செயற்கை தங்கம்
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மாரதான் ஃபியூஷன் (Marathon Fusion) என்ற புத்தாக்க நிறுவனம், பாதரசத்திலிருந்து செயற்கை தங்கத்தை உருவாக்கும் ஒரு புரட்சிகரமான நுட்பத்தைக் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தக் கலிஃபோர்னியா ஸ்டார்ட்அப் நிறுவனம் உண்மையில் தனித்துவமான ஒரு அணுகுமுறையை முன்வைக்கிறது.
அணுக்கரு இணைவு உலையில் உள்ள நியூட்ரான் துகள்களிலிருந்து வரும் கதிரியக்கத்தைப் பயன்படுத்தி, பாதரசத்தை ஒரு ஐசோடோபிக் வடிவத்திலிருந்து மற்றொரு வடிவமாக மாற்ற முடியும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
குறிப்பாக, பாதரசம்-197 (Mercury-197) உருவாக்கப்படலாம். இந்த நிலையற்ற ஐசோடோப் பின்னர் தங்கம்-197 (Gold-197) ஆக சிதைவடையும். இதுவே தங்கத்தின் நிலையான வடிவம்.
இந்த துகள் சிதைவு செயல்முறையில், ஒரு துணை அணு துகள் தானாகவே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இலகுவான துகள்களாக மாறுகிறது.
மாரதான் ஃபியூஷன் குழு, ஒரு இணைவு மின் நிலையம் ஒரு முழு ஆண்டுக்கு இயங்கினால், ஒரு ஜிகாவாட் வெப்ப மின்சாரத்தைப் பயன்படுத்தி பல டன் தங்கத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று நம்புவதாக கூறுகிறது.
இந்த கூற்று, பெரிய அளவில் சாத்தியமாகும் பட்சத்தில், உலகின் தங்க விநியோகத்தில் புரட்சியை ஏற்படுத்தி, அதன் பொருளாதார நிலப்பரப்பை மாற்றியமைக்கக்கூடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |