பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவிற்கு காதலை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய அருண்.., அர்ச்சனா கூறிய பதில்
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த சீசனில் சுமால் ஹவுஸ், பிக் ஹவுஸ் என இருந்த நிலையில், இந்த சீசனில் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் டீம், பெண்கள் டீம் என இரு டீம்களாக இருக்கின்றனர்.
தற்போது, ஐந்தாவது வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுனிதா குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.
இந்நிலையில், கடந்த பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரான அர்ச்சனாவும், நடிகர் அருணும் காதலித்து வருவதாக சோஷியல் மீடியாவில் பேசப்பட்டு வந்தது.
இதுகுறித்து இருவரும் கருத்து தெரிவிக்காமல் இருந்த நிலையில் அருண் பிரசாத் கேமரா முன்பு நின்று காதலி அர்ச்சனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி காதலை உறுதிப்படுத்தி உள்ளார்.
அருண் கேமரா முன் நின்று, "ஹாய், நீ நல்லா இருப்ப என்று நம்புகிறேன், நானும் இங்கே நன்றாக இருக்கிறேன், நான் இந்த வாரம் கேப்டனாகி இருக்கிறேன். இன்று உன்னுடைய பிறந்த நாள், இந்த நாளில் அனைத்து விதமான வெற்றியும் உனக்கு கிடைக்க வேண்டும் என்று இறைவனை வாழ்த்துகிறேன். ஐ லவ் யூ" என்று கூறியுள்ளார்.
My Birthday is fulfilled 🥹
— Archana Ravichandran (@Archana_ravi_) November 11, 2024
Waited till 1.00 AM to watch this😌
Thanks for this wonderful feeling ❤️#captain👑 #wholesome #biggboss8tamil https://t.co/3fwmp81apY
இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், நடிகை அர்ச்சனா, தனது எக்ஸ் தள பக்கத்தில் இதற்கு பதிலளித்துள்ளார்.
நடிகை அர்ச்சனா "இப்போது தான் என் பிறந்த நாள் முழுமை அடைந்தது. இதை பார்க்கத்தான் இரவு 1 மணிவரை காத்திருந்தேன். நன்றி கேப்டன்" என அருணின் பெயரை குறிப்பிடாமல் பதிவு போட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து இருவரும் காதலிப்பது உறுதியாகி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |