கச்சத்தீவு குறித்து விஜய் பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம்! சீமானையும் பகிரங்கமாக சாடிய அருண் சித்தார்த்
கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை சர்வஜன அதிகாரம் கட்சியின் அருண் சித்தார்த் கண்டித்துள்ளார்.
கச்சத்தீவு குறித்து விஜய் பேசியதை நாம் சர்வஜன அதிகாரம் கட்சியின் சார்பில் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.
விஜய்யினுடைய இந்த மேம்போக்கான அறிக்கை கச்சத்தீவு குறித்த எந்தவிதமான ஆழமான ஆய்வுகளுமற்ற அறிக்கையாக நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு காரணம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது.
கச்சத்தீவின் உரிமையை நிலைநாட்டுவதற்கு கிட்டத்தட்ட 450 ஆண்டுகள் பழமையான ஆவணங்கள் நம்மிடம் இருக்கின்றது.
இந்த கச்சத்தீவு இந்தியா நமக்கு அளித்ததல்ல; எமது உரிமையை நிலைநாட்டி அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதாகும்.
கச்சத்தீவு குறித்து விஜய் பேசுவதற்கு முன்பாக அரசியல் கட்சித் தலைவராக ஆராய்ந்து பேசியிருக்க வேண்டும் என்பது எமது வேண்டுகோளாகும் என்றார்.
மேலும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து பேசியபோது, கச்சத்தீவு எமக்குத்தான் சொந்தம் என்று அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
அத்துடன் சீமான் அவர்களின் அரசியல் ஆழமாக இல்லை. இலங்கையின் உள்நாட்டு பிணக்கினை தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருவது கண்கூடாக தெரிகிறது என்றும் கூறினார்.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |