சுவிஸில் அருந்தவராஜாவின் “புலம்பெயர் தமிழர்கள்-வலியும் வரலாறும் “ புத்தகம் வெளியீடு!
சுவிஸ் தலைநகரில் கல்வியாளர் அருந்தவராஜா அவர்களின் புலம்பெயர் தமிழர் வலியும் வரலாறும் எனும் நூலின் வெளியீட்டு விழா பேர்ன் வள்ளுவன் தமிழ்ப்பள்ளியின் அதிபர் பூநகரி பொன்னம்பலம் முருகவேள் அவர்களின் அனுசரணையில் தமிழ் எழுத்தாளர் கல்லாறு சதீஷ் தலைமையில் நடைபெற்றது.
புலம்பெயர் தமிழர் வலியும் வரலாறும்
கல்வியாளர் அருந்தவராஜா அவர்களின் புலம்பெயர் தமிழர் வலியும் வரலாறும் எனும் நூலின் அறிமுக விழா சுவிஸ் தலைநகர் பேர்னில் 17.02.2024 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சர்வதேசத் தலைநகரான ஜெனிவாவில் வசிக்கும் விரிவுரையாளர் அருந்தவராஜா எழுதிய ஐந்தாவது நூல் இதுவாகும்.
இந்த ஐந்து நூல்களும் தொடர்ச்சியாக சுவிஸ் தமிழ் எழுத்தாளர் கலாநிதி நாகேஸ்வரன் அருள்ராசா(கல்லாறு சதீஷ்)தலைமையிலே வெளியீடு செய்யப்பட்டது.
பேர்ண் வள்ளுவன் தமிழ் பள்ளியும், யாழ் பல்கலைக்கழக 85/86 கால மாணவர்களும்,பேர்ண் சிவன் கோயில் தமிழ் களரி மண்டபத்தில் நடாத்திய நூல் அறிமுக நிகழ்வுக்கு சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் நிறைந்து வந்து நூலினைப் பெற்றுக்கொண்டு தமிழ் வளர்ச்சிக்கு துணை செய்தனர்.
ஆங்கில நூல் ஆசிரியரும், ஆங்கிலத்திரைப்பட இயக்குனருமான கார்த்திக் இராமக்கிருஷ்ணன், நூலாசிரியர் ஜெயக்கொடி ஆகியோர் மதிப்புரைகளை வழங்கினர்.
நூலாசிரியர் சண் தவராஜா,கலையுயிர் வாவி.பாஸ்கர், வித்தகன் சுரேஷ் செல்வரட்ணம், பிராங்போட் வர்த்தகர் இராமேஸ்வரன் ,சிவருசி சசி தர்மலிங்கம்ஆகியோர் சிறப்புரைகளை வழங்கினர்.
வரவேற்புரையை தாமரைச் செல்வனும், வாழ்த்துரையை பூநகரி முருகவேள் ஆசிரியரும் நிகழ்த்தினர் .
“இந்த உலகம் பல நவீனங்களைக் கண்டு பிடித்து விட்டது, ஆனால் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது ஒரு பேரன்பின் உலகம் தான்”என்றார்.
இந்த நிகழ்வுக்குப் சிறப்பு விருந்தினராக சீனத் தமிழாளர் நிறைமதி வருகை தந்து சீனாவுக்கும் தமிழர்களுக்குமான வரலாற்றுத் தொடர்புகளை எடுத்துரைத்தார்.
கவிஞர் இன்பம் அருளையாவின் பாடல்களும், திருமதி குளோரியா ரூபாவின் கவிதையும், பொன்னம்பலம் அவர்களின் பாடலுமாக விழா சிறப்புற நடைபெற்றது.
வேலா கிறடிற் உரிமையாளர் வரதன் விழாவின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். செல்வி கார்த்திகா,நெதர்லாந்து தயாமோகன் ஆகியோர் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |