நடிகர் ஆர்யாவுக்கு குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா? உச்சகட்ட மகிழ்ச்சியில் விஷால்
பிரபல திரைப்பட நடிகரான ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதிக்கு குழந்தை பிறந்துவிட்டதாக, நடிகர் விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் அமைதியாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான ஆர்யா, நடிகையான சாயிஷாவை கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து இவர்கள் நடிப்பில் வெளியான டெடி படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ஆனால், அதன் பின் சாயிஷாவையே பார்க்க முடியவில்லை.
அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அது குறித்து எந்த ஒரு தகவலும் ஆர்யா கூறவில்லை.
So Happy to break this news,great to be an Uncle,my Bro Jammy & Sayyeshaa r blessed wit a #BabyGirl,uncontrollable emotions rite now in midst of shoot.Always wish de best 4 dem,Inshallah,GB de new Born,my Baby Girl @sayyeshaa & @arya_offl for taking a new responsibility as a Dad
— Vishal (@VishalKOfficial) July 23, 2021
இந்நிலையில், நடிகர் விஷால் சற்று முன் போட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆர்யா-சாயிஷாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், நான் மாமா ஆனதில் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதைக் கண்ட இணையவாசிகள் ஆர்யா-சாயிஷா தம்பதிக்கு தங்கள் வாழ்த்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.