சொல்ல முடியாத வேதனையில் இருந்தேன்! என்னை நம்பியவங்களுக்கு நன்றி... ஈழப்பெண் விவகாரத்தில் முதல்முறையாக பேசிய நடிகர் ஆர்யா
ஈழப்பெண் பண மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகர் ஆர்யாவுக்கு தொடர்பில்லை என தெரியவந்துள்ள நிலையில் அது குறித்து உருக்கமான பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.
இலங்கையை சேர்ந்த பெண் விட்ஜா, ஜேர்மனியில் குடியுரிமை பெற்று அங்குள்ள சுகாதாரதுறையில் பணிப்புரிந்து வந்தவர். நடிகர் ஆர்யா 70லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாக குடியரசு தலைவர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக கடந்த பிப்ரவரி மாதம் புகார் ஒன்றை அளித்தார்.
இளம்பெண் அளித்த புகாரில், நடிகர் ஆர்யாவுடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்தும், கொரோனாவில் பணக்கஷ்டத்தில் இருப்பதாக தெரிவித்து தன்னிடம் 70லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலமாக பெற்று கொண்டு ஏமாற்றியதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்த விசாரணையில் நடிகர் ஆர்யா போல் போலி வலைதளத்தை உருவாக்கி ஜேர்மனி பெண்ணிடம் இருவர் பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. வலைதள ஐபி முகவரியை வைத்து ராணிப்பேட்டை பெரும்புலிப்பாக்கத்தில் பதுங்கி இருந்த இருவரை சைபர் கிரைம் பொலிசார் கைது செய்தனர்.
I would like to thank Commissioner of Police @chennaipolice_
— Arya (@arya_offl) August 24, 2021
Additional Commissioner of Police-Central Crime Branch and
Cyber Crime Team of Chennai city for arresting the Real culprit. It was a real mental trauma which I never expressed. Love to everyone who believed in me ?
தன் மீதான குற்றச்சாட்டு குறித்து தொடர்ந்து மெளனம் காத்து வந்த ஆர்யா முதல்முறையாக அதை கலைத்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் ஆர்யா, சென்னை காவல் ஆணையருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் மற்றும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்த சென்னை சைபர் க்ரைம் பொலிசாருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் வெளிப்படுத்த முடியாத மன அதிர்ச்சியில் இருந்தேன். என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.