போதை பொருள் வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகனுக்காக ஆஜராகும் மிகப்பெரிய வழக்கறிஞர்! அவரின் ஒருநாள் கட்டணம் எவ்வளவு தெரியுமா?
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் வழக்கில் அவருக்கு வழக்கறிஞராக ஆஜராகும் சதீஷ் மானேஷின்டே குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ஷாருக்கானின் மகன், ஆர்யன் கான் சமீபத்தில் மும்பையில் ஒரு சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தி பொலிசில் சிக்கி கொண்டார். பொலிசார் இவரை கைது செய்துள்ளனர்.
23 வயதான இவர் பிரபல பாலிவுட் நடிகரின் மகன் என்பதால் இந்தியா முழுவதும் இந்த வழக்கு பிரபலமாகி வருகிறது. இந்த வழக்கில் ஆர்யன் கான் சார்பில் வழக்கறிஞர் சதீஷ் மானேஷின்டே என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
இவர் இந்தியாவின் மிகப்பெரிய கிரிமினல் வழக்கறிஞர் ஆவார். பல முக்கிய அரசியல் தலைவர்கள், நடிகர்கள், மற்றும் பல பிரபலங்களின் வழக்குகளை கையாண்டவர் 1993 மும்பை வெடிகுண்டு வழக்கில் சிக்கிய சஞ்சய் தத்திற்கு இவர் தான் வக்கீலாக செயல்பட்டார். அவருக்கு ஜாமீனும் பெற்றுக்கொடுத்தார்.
சஞ்சய் தத் 2007ம் ஆண்டு சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஆதரவாக பணியாற்றிய வக்கீல் குழுவில் இவரும் இருந்தார், சஞ்சய் தத் மட்டுமல்ல இவர் சல்மான் கானுக்காகவும் பணியாற்றியுள்ளார்.
சல்மான் கான் குடிபோதையில் வாகனம் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் இறந்துவிட்டார் அந்த வழக்கில் சல்மான் கானிற்கு ஜாமின் வாங்கி கொடுத்தது இவர் தான். இந்த நிலையில் தான் இவர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் வழக்கில் அவருக்கு ஆதரவாக ஆஜராகவுள்ளார்.
சதீஷ், வழக்கில் ஒரு முறை ஆஜராவதற்கு ரூ 10 லட்சம் வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது.