பேராசிரியராகப் பணியைத் தொடங்கியவர்... இன்று ரூ 23022 கோடி நிறுவனத்தின் உரிமையாளர்
சிறந்த வாய்ப்புகளுக்காக பல இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பிற நாடுகளுக்குச் சென்றனர்.
கோடீஸ்வர இந்தியர்களில்
அவர்களில் பலர் தற்போது ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள நிறுவனங்களை நிர்வகிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் ஆசாத் மூப்பன். 1987ல் துபாய் மாகாணத்திற்கு குடிபெயர்ந்த ஒரு மருத்துவர்.
அவர் தற்போது துபாய் மாகாணத்தில் உள்ள பெரும் கோடீஸ்வர இந்தியர்களில் ஒருவராகவும், ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரபலமான நபராகவும் உள்ளார்.
ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தை நிறுவியவர் இந்த மூப்பன். இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.23022 கோடி. தற்போது 71 வயதாகும் மூப்பன் கோழிக்கோடு அரசு கல்லூரியில் மருத்துவ விரிவுரையாளராக 1982ல் தனது பணியைத் தொடங்கினார்.
ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுகாதாரத்துறையில் வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்த மூப்பன் 1987ல் துபாய்க்கு இடம் மாற முடிவு செய்தார். அதுவரை அங்குள்ள மக்களுக்கு அறிமுகம் செய்யப்படாத ஒற்றை மருத்துவர் சுகாதார மையம் ஒன்றை தொடங்கி, தமது திட்டத்திற்கு துவக்கப்புள்ளி வைத்தார்.
ஒன்பது நாடுகளில்
அவர் எண்ணியது போலவே Aster DM ஹெல்த்கேர் நிறுவனம் உலகளாவிய நிறுவனமாக வளர்ச்சி கண்டது. MBBS-ல் தங்கப் பதக்கம் வென்ற மூப்பன், கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்பகஞ்சேரியில் பிறந்தார்.
மூப்பன் டெல்லி பல்கலைக்கழகத்தில் பொது மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் மற்றும் மார்பு நோய்களில் டிப்ளமோ பெற்றவர். டாக்டர் மூப்பனின் சுகாதார நிறுவனம் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் வளைகுடா நாடுகள் உட்பட ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது.
Aster DM ஹெல்த்கேர் குழுமத்தில் 20,790 பேர்கள் பணியாற்றுகின்றனர். அத்துடன் மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் மற்றும் மருந்தகங்கள் என 323 எண்ணிக்கையில் விரிவடைந்துள்ளது. ஆசாத் மூப்பனின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ 8400 கோடி என்றே தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |