வாணவேடிக்கை காட்டிய அசலங்கா, ஷானகா: வெற்றியுடன் தொடங்கிய காலி மார்வெல்ஸ்
லங்கா பிரீமியர் லீக்கின் முதல் போட்டியில், காலி மார்வெல்ஸ் அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தியது.
அசலங்கா வாணவேடிக்கை
LPL 2026 (லங்கா பிரீமியர் லீக்) தொடரின் முதல் போட்டி கொழும்பில் நடந்தது.
இப்போட்டியில் தசுன் ஷானாவின் தலைமையிலான காலி மார்வெல்ஸ் மற்றும் ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய காலி மார்வெல்ஸ் (Galle Marvels) அணியில் சாம் ஹார்பர் 19 பந்துகளில் 40 ஓட்டங்கள் விளாசினார்.
சிக்ஸர்களை பறக்கவிட்ட சரித் அசலங்கா (Charith Asalanka) 38 பந்துகளில் 65 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்) விளாசினார்.
ஆட்டநாயகன்
கடைசி கட்டத்தில் ஷானகா (Shanka) 9 பந்துகளில் 31 ஓட்டங்களும், மொஹம்மது நவாஸ் 9 பந்துகளில் 21 ஓட்டங்களும் விளாச, காலி மார்வெல்ஸ் 213 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் ஆடிய ஜாஃப்னா கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 177 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. துனித் வெல்லாலகே 40 (24) ஓட்டங்களும், அவிஷ்கா பெர்னாண்டோ 34 (21) ஓட்டங்களும், கமில் மிஷாரா 28 (14) ஓட்டங்களும் விளாசினர்.
மிரட்டலாக பந்துவீசிய இஷான் மலிங்கா 4 விக்கெட்டுகளும், அகிப் ஜாவேத் 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர். 65 ஓட்டங்களுடன், ஒரு விக்கெட்டும் வீழ்த்திய அசலங்கா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |