கொழும்பு ஒருநாள் போட்டி: அவுஸ்திரேலியாவிடம் அரைசதம் விளாசி கெத்து காட்டிய இலங்கை வீரர்கள்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் தனஞ்ஜெய டி சில்வா, அசலங்கா ஆகியோர் அரைசதம் விளாசினர்.
இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா, முதலில் இலங்கை அணியை துடுப்பாட்டம் செய்ய பணித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் டிக்வெல்ல ஒரு ரன்னில் ஸ்டாம்ப்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 26 ஆக உயர்ந்தபோது, கம்மின்ஸ் பந்துவீச்சில் குசால் மெண்டிஸ் (14) போல்டானார்.
அவரைத் தொடர்ந்து நிசங்கா 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். நான்காவது விக்கெட்டுக்கு கைகோர்த்த தனஞ்ஜெய டி சில்வா-அசலங்கா ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பொறுமையுடன் ஓட்டங்களை சேர்த்த தனஞ்ஜெய, ஒருநாள் போட்டிகளில் தனது 8வது அரைசதத்தை பதிவு செய்தார். 61 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் விளாசிய அவர், மிச்செல் மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
Fifty for DDS. It's been a patient knock from the right-hander. 🙌
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 21, 2022
Will he make it a big one?#SLvAUS pic.twitter.com/840mw223lH
அதன் பின்னர் அதிரடி காட்டிய அசலங்காவும் அரைசதம் அடித்தார். 15வது ஒருநாள் போட்டியில் விளையாடும் அவருக்கு இது 6வது அரைசதம் ஆகும். இலங்கை அணி தற்போது வரை 30 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
Charith Asalanka brings up his 6th ODI fifty! 👊#SLvAUS pic.twitter.com/NDFGouMPGx
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 21, 2022
ஏற்கனவே 2 போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் கோப்பையை வெல்லும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022