LPL 2024: 6 பந்தில் 24 ரன் விளாசி ஜப்னா கிங்ஸை வெற்றிபெற வைத்த வீரர்
LPL தொடர் போட்டியில் ஜப்னா கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணியை வீழ்த்தியது.
மழையால் தாமதம்
கொழும்பில் தொடங்க இருந்த கண்டி மற்றும் ஜப்னா அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் தாமதமானது.
கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் தடைபட்டதால் தலா 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக அறிவிக்கப்பட்டது.
முதலில் ஆடிய கண்டி ஃபால்கன்ஸ் (Kandy Falcons) அணி 5 விக்கெட்டுக்கு 78 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக முகமது ஹாரிஸ் 13 பந்துகளில் 30 ஓட்டங்கள் விளாசினார். பெஹ்ரெண்டொர்ஃப் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
Rain Doesn’t Faze Us! ?☄
— LPL - Lanka Premier League (@LPLT20) July 13, 2024
Falcons post 78 runs in 7 overs. The Kings need 79 runs in 42 balls to chase down the target. ?
It’s all set for a thrilling finish! ?? #LPL2024 pic.twitter.com/shoq35ApyM
ஓமர்சாய் மிரட்டல்
அடுத்து களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் மேத்யூஸ், ஷானக பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் அவிஷ்கா பெர்னாண்டோ 7 பந்தில் 16 ஓட்டங்கள் விளாசி ரன்அவுட் ஆனார்.
அதிரடியில் மிரட்டிய அணித்தலைவர் அசலங்கா 9 பந்துகளில் 4 சிக்ஸர்கள் பறக்கவிட்டு 26 ஓட்டங்கள் குவித்தார். பின்னர் வந்த ஓமர்சாய் ஆட்டமிழக்காமல் 6 பந்தில் 3 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 24 ஓட்டங்கள் விளாசி அணியை 6வது ஓவரிலேயே வெற்றி பெற வைத்தார்.
கண்டி அணி தரப்பில் ஏஞ்சலோ மேத்யூஸ், ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
Jaffna Kings Triumph by Wickets!??
— LPL - Lanka Premier League (@LPLT20) July 13, 2024
A nail-biting finish sees the ? emerge victorious.
Kings continue their dominant run! ??#LPL2024 pic.twitter.com/BhUoQomjA1
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |