எங்கள் கூட்டணிகளில் நிறைய சிக்கல்கள்: உலகக்கிண்ணத்திற்கு முன் சரிசெய்ய வேண்டும் - அசலங்கா
இலங்கை அணியில் கூட்டணிகளில் உள்ள சிக்கல்களை உலகக்கிண்ணத்திற்கு முன்பே சரிசெய்ய வேண்டும் என சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
சரித் அசலங்கா
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்கா (Charith Asalanka) தோல்விக்கான காரணங்களை குறிப்பிட்டார்.
ஒரு கூடுதல் பந்துவீச்சாளரை பயன்படுத்த முயற்சித்ததாகவும், அதன் காரணமாகவே ஒரு துடுப்பாட்ட வீரரை இழந்ததாகவும் கூறினார். அதனால் தங்களுக்கு தேவையான ஓட்டங்கள் கிடைக்கவில்லை என்றார்.
அப்போதுதான் மிகப்பெரிய சேதம்
மேலும் பேசிய அவர், "நாங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். தொடக்க வீரர்களிடம் இருந்து எங்களுக்கு சிறந்த தொடக்கம் கிடைக்கவில்லை. நானும், தாசுனும் அடுத்தடுத்த பந்துவீச்சுகளில் அவுட் ஆனோம். அப்போதுதான் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது.
எங்கள் கூட்டணிகளில் எங்களுக்கு நிறைய சிக்கல்கள் இருந்தன. மேலும் உலகக்கிண்ணத்திற்கு முன்னதாகவே நாங்கள் அதை சரி செய்ய வேண்டியயுள்ளது.
180 முதல் 200 வரை தொடர்ந்து ஸ்கோர் செய்வது எப்படி என்பதையும், பகுதிநேர பந்துவீச்சாளர்களை (அசலங்கா, கமிந்து, தாசுன்) எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பதையும் நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அவை எதிர்காலத்தில் நாங்கள் மேம்படுத்த வேண்டிய விடயங்கள்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |