சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டிய இலங்கை வீரர்!
நியூஸிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 196 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இலங்கை அணி அதிரடி ஆட்டம்
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. பதும் நிசங்கா முதல் பந்திலேயே அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடி காட்டிய மற்றொரு தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் 9 பந்தில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 25 ஓட்டங்கள் விளாசினார்.
Ready to go in Auckland!
— ICC (@ICC) April 2, 2023
New Zealand to bowl first in the first T20I against Sri Lanka ?
Watch the #NZvSL T20I series live on https://t.co/MHHfZPyHf9 ?
? @BLACKCAPS pic.twitter.com/BuakIyTp95
அசலங்கா ருத்ர தாண்டவம்
அதன் பின்னர் களமிறங்கிய தனஞ்ஜெய டி சில்வா 15 ஓட்டங்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த அசலங்கா ருத்ர தாண்டவம் ஆடினார்.
குசால் பெரேரா - அசலங்கா கூட்டணி மூலம் இலங்கை அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. சிக்ஸர்களை பறக்கவிட்ட அசலங்கா 41 பந்துகளில் 67 ஓட்டங்கள் விளாசினார்.
Brilliant knock by Charith Asalanka! ?#NZvSL pic.twitter.com/OpjvKuMoM5
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 2, 2023
குசால் பெரேரா அரைசதம் விளாசல்
அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். பின்னர் களமிறங்கிய ஹசரங்கா 11 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 21 ஓட்டங்கள் விளாசினார்.
குசால் பெரேரா இறுதிவரை களத்தில் நின்று 53 (45) ஓட்டங்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் நீஷம் 2 விக்கெட்டுகளும், மில்னே, லிஸ்டர் மற்றும் ஷிப்லே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Welcome back, #KJP! ?#NZvSL pic.twitter.com/xvKiUb3dLQ
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 2, 2023