கண்ணீர்விட்டு அழுத ஆப்கானிஸ்தான் வீரர்! சல்யூட் அடித்த ரசிகர்கள்: அபார வெற்றி தேடித் தந்த வீரர்கள்
நமீபியா அணிக்கெதிரான போட்டியோடு ஆப்கானிஸ்தான் அணியின் வீரர் அஸ்கர் ஆப்கான் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவர் போட்டியின் இடையே கண்கலங்கி பேசினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக்கோப்பை டி20 தொடருக்கான சூப்பர் 12 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் படி இன்றைய போட்டியி நமீபியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக மொகமது ஷஷாத் 45 ஓட்டங்களும், ஹஸ்ரட்டுல்லா ஷஷாய் 33 ஓட்டங்களும் எடுத்தனர்.
இப்போட்டியில், அணியின் சீனியர் வீரரான அஸ்கர் அப்கான் 23 பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்தார். இவர் இந்த போட்டியோடு தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் இவர் பேட்டிங் ஆட வந்த போது, நமீபியா வீரர்கள் அவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில், வரிசையில் நின்று கை குலுக்கினர்.
அதே போன்று அவர் அவுட் ஆகி சென்ற போது, ஆப்கானிஸ்தான் வீரர்கள் பேட்டை மேலே உயர்த்தி மரியாதை செலுத்தினர். மேலும் இடையில் அவரிடம் பேட்டி எடுத்த போது, சில சொல்ல முடியாத காரணங்களால் ஓய்வை அறிவித்திருப்பதாக கூறி கண்கலங்கினார்.
அணியின் மிக முக்கிய வீரர் என்பதால், இவர் மைதானத்தில் வந்த போது ரசிகர்கள் சல்யூட் அடித்து வரவேற்றனர்.
அதன் பின் 161 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நமீபியா அணி, ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 98 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.