ஆஷல் தோல்வியால் இங்கிலாந்து அணியில் முக்கிய நபர் பதவி விலகினார் - அதிர்ச்சி தகவல்
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் படுதோல்வி எதிரொலியாக இங்கிலாந்து அணியின் தலைமைப்பயற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
சமீபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்த நிலையில் ஒரு போட்டியை போராடி டிரா செய்தது.
படுதோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணியின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. கேப்டன் ஜோ ரூட் மற்றும் அணி நிர்வாகம் மீது முன்னாள் வீரர்கள் பலர் பல்வேறு விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே இங்கிலாந்து கிரிக்கெட்டின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து முன்னாள் வீரர் ஆஷ்லே ஜைல்ஸ் விலகிய நிலயில் இங்கிலாந்து அணியின் தலைமைப்பயிற்சியாளர் சில்வர் வுட் பதவியில் இருந்து விலகியுள்ளார். இது அந்த அணியின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.