41-க்கு 3 விக்கெட் என தடுமாறிய அவுஸ்திரேலியா: 84 ஓட்டங்கள் விளாசிய ஆஷ்லே..அபார வெற்றி
Australia women beat new zealand women by 40 runs: அவுஸ்திரேலிய மகளிர் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், அவுஸ்திரேலிய அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஷ்லே கார்ட்னர்
சிட்னியில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி நடந்தது.
முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பெத் மூனி 39 (28) ஓட்டங்களில் வெளியேற, ஆஷ்லே கார்ட்னர் (Asleigh Gardner) தனியாளாக சிக்ஸர்களை பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 167 ஓட்டங்கள் எடுத்தது. ஆஷ்லே கார்ட்னர் 45 பந்துகளில் 4 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்கள் விளாசினார்.
நியூசிலாந்து தோல்வி
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
அதிகபட்சமாக அணித்தலைவர் மேலி கெர் 32 ஓட்டங்களும், மேடி க்ரீன் 26 ஓட்டங்களும், போலி இங்லிஸ் 19 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஜார்ஜியா வாரேம் 3 விக்கெட்டுகளும், கார்ட்னர் 2 விக்கெட்டுகளும், கார்த் மற்றும் ஹாமில்டன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.