முதல் உலகக்கிண்ண சதத்தை பதிவு செய்த வீராங்கனை! 327 ஓட்டங்கள் இலக்கு..கதிகலங்கிய நியூசிலாந்து
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லேய் கார்ட்னர் அதிரடி சதம் விளாசினார்.
தடுமாறிய அணி
மகளிர் உலகக்கிண்ணத்தின் இன்றையப் போட்டியில், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்தூரில் விளையாடி வருகின்றன.
Maiden World Cup wicket for Bree Illing and it's the big one, Alyssa Healy! 👏
— Female Cricket (@imfemalecricket) October 1, 2025
Australia's fiery start halted at 40/1 (5).🏏#CricketTwitter #CWC25 #AUSvNZ pic.twitter.com/ANNw7zgwik
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது. அலைசா ஹீலி 19 ஓட்டங்களும், போஎபே லிட்ச்ஃபீல்ட் 45 ஓட்டங்களும் எடுத்தனர். எல்லிஸ் பெர்ரி 41 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்தார்.
எனினும், அவுஸ்திரேலிய அணி 128 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் என தடுமாறியது. அப்போது ஆஷ்லேய் கார்ட்னர் (Ashleigh Gardner) அதிரடியில் மிரட்டினார்.
அதிரடி சதம்
அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டிய கார்ட்னர் 77 பந்துகளில் சதம் விளாசினார். இது இவரது முதல் உலகக்கிண்ண சதம் ஆகும்.
அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 326 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஆஷ்லேய் கார்ட்னர் 83 பந்துகளில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 115 ஓட்டங்கள் குவித்தார்.
கிம் கார்த் 38 (37) ஓட்டங்களும், டாலியா மெக்ராத் 26 (34) ஓட்டங்களும் எடுத்தனர். ஜெஸ் கெர் மற்றும் லியா டஹூஹு தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
End of a stellar knock from Ash Gardner! 💥
— Female Cricket (@imfemalecricket) October 1, 2025
Bree Illing with the breakthrough, but Australia well in command at 308/8 (46.3). 🏏#CricketTwitter #CWC25 #AUSvNZ pic.twitter.com/XbRhG50ZQi
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |