29 பந்தில் 50 ரன் விளாசிய வீரர்! அலறவிட்ட ஆடம் ஜாம்பா..பிக்பாஷ் லீக்கில் அதகளம்
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி வீரர் ஆஷ்டன் ஏகர், மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி அரைசதம் அடித்தார்.
ஆரோன் ஹார்டி நிதானம்
பெர்த் மைதானத்தில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதும் பிக்பாஷ் லீக் போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற ரெனெகேட்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய பெர்த் அணியில் ஃபின் ஆலன் 19 (12) ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
GOLDEN DUCK 😮
— KFC Big Bash League (@BBL) January 7, 2025
Mitch Marsh in his return to the BBL goes after just one delivery from Will Sutherland! #BBL14 pic.twitter.com/s5JVi9fipH
அடுத்து வந்த மிட் செல் மார்ஷ் மற்றும் கூப்பர் கோனொலி இருவரும் டக்அவுட் ஆகி வெளியேறினர். மறுமுனையில் ஆரோன் ஹார்டி நிதான ஆட்டத்தை கடைபிடித்தார்.
ஆனால் டர்னர் (8), ஹாப்சன் (12) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஆரோன் ஹார்டி (Aaron Hardie) 34 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்கள் எடுத்து டாம் ரோஜர்ஸ் ஓவரில் அவுட் ஆனார்.
தடுமாறிய பெர்த் அணி
அவரது விக்கெட் இழப்பால் பெர்த் அணி 6 விக்கெட்டுக்கு 86 ஓட்டங்கள் என தடுமாறியது. எனினும், ஆஷ்டன் ஏகர் (Ashton Agar) அதிரடியில் மிரட்டினார்.
Back-to-back wickets and an incoming hat-trick ball!
— KFC Big Bash League (@BBL) January 7, 2025
Adam Zampa 👏 #BBL14 pic.twitter.com/R3hcjlpgqE
சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் ஆரோன் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 8 விக்கெட்டுக்கு 147 ஓட்டங்கள் எடுத்தது.
ஏகர் ஆட்டமிழக்காமல் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 51 ஓட்டங்கள் குவித்தார். ஆடம் ஜாம்பா (Adam Zampa) 3 விக்கெட்டுகளும், டாம் ரோஜர்ஸ் மற்றும் வில் சதர்லேண்ட் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |