ஆட்டமிழக்காமல் 41 பந்தில் 99 ரன் விளாசிய கேப்டன்! வாணவேடிக்கையில் அதிர்ந்த மைதானம் (வீடியோ)
பிக் பாஷ் லீக் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தலைவர் ஆஷ்டன் டர்னர் 1 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
விக்கெட்டுகளை சரித்த சாம்ஸ்
சிட்னியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையிலான பிக் பாஷ் லீக் போட்டி நடந்து வருகிறது.
Ashton Turner top scored with unbeaten 99* off 41 balls with 8 fours and 8 sixes as Perth Scorchers made 202/8 in 20 overs against Sydney Thunder #BBL15 #AshtonTurner #Scorchers pic.twitter.com/XozLDPj7AM
— CricTrend (@CricTrend_CT) December 30, 2025
சிட்னி தண்டர் பந்துவீச்சை தெரிவு செய்ய பெர்த் அணி முதலில் துடுப்பாடியது. தொடக்க வீரர்கள் மார்ஷ் (6), ஆலன் (11) சொற்ப ஓட்டங்களில் வெளியேற, இங்கிலிஸ் 13 (9) ஓட்டங்களில் சாம்ஸ் ஓவரில் அவுட் ஆனார்.
அப்போது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 3 விக்கெட்டுக்கு 34 ஓட்டங்கள் என தடுமாறியது. பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் ஆஷ்டன் டர்னர் (Ashton Turner) வாணவேடிக்கை காட்டினார்.
டர்னர் ருத்ர தாண்டவம்
அவருடன் கைகோர்த்த கொனோலி 28 ஓட்டங்களும், ஹார்டி 28 (16) ஓட்டங்களும் எடுத்தனர். மறுமுனையில் அரைசதம் அடித்த டர்னர் சதத்தை நோக்கி முன்னேறினார்.
ஆனால், கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் சரிய, டர்னர் ஆட்டமிழக்காமல் 99 (41) ஓட்டங்கள் எடுத்தார். அவரது ஸ்கோரில் 8 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் பெர்த் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ஓட்டங்கள் குவித்தது. டேனியல் சாம்ஸ் (Daniel Sams) 4 விக்கெட்டுகளும், டாப்லி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |