ஐபிஎல் 2025: கடைசி ஓவர் வரை திக் திக்..சிக்ஸரில் டெல்லி கேபிட்டல்ஸ் த்ரில் வெற்றி
லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
பூரன், மார்ஷ் வாணவேடிக்கை
விசாகப்பட்டினத்தில் நடந்த ஐபிஎல் 2025யின் 4வது போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் 8 விக்கெட்டுக்கு 209 ஓட்டங்கள் குவித்தது. நிக்கோலஸ் பூரன் 75 (30) ஓட்டங்களும், மிட்சேல் மார்ஷ் 72 (36) ஓட்டங்களும் விளாசினர். ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Starc is HIM 😮💨pic.twitter.com/ATeMt7V4qT
— Delhi Capitals (@DelhiCapitals) March 24, 2025
அடுத்து களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் பாப் டூ பிளெஸ்ஸிஸ் 18 பந்துகளில் 29 ஓட்டங்கள் விளாசினார்.
சிக்ஸர் அடித்து வெற்றி
பின்னர் ஸ்டப்ஸ் 22 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 34 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து இம்பேக்ட் வீரராக களமிறங்கிய அஷுடோஷ் ஷர்மா அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.
அவருக்கு துணையாக விப்ராஜ் நிகம் ருத்ர தாண்டவம் ஆடினார். இதன்மூலம் டெல்லி அணி வெற்றியை நெருங்கியது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் இரண்டு பந்துகளில் 1 ரன் கிடைத்தது.
INJECTTTTT!!! 🔥🔥pic.twitter.com/vvrnPmiK2d
— Delhi Capitals (@DelhiCapitals) March 24, 2025
மூன்றாவது பந்தில் அஷுதோஷ் சிக்ஸர் அடிக்க, டெல்லி கேபிட்டல்ஸ் 9விக்கெட்டுக்கு 211 ஓட்டங்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
இறுதிவரை களத்தில் நின்ற அஷுடோஷ் ஷர்மா (Ashutosh Sharma) 31 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் குவித்தார்.
லக்னோ அணியின் தரப்பில் ஷர்துல் தாக்கூர், சித்தார்த், திக்வேஷ் மற்றும் ரவி பிஸ்னோய் தலா 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினர்.
A win for the ages 💙❤️ pic.twitter.com/DmeAgPoGES
— Delhi Capitals (@DelhiCapitals) March 24, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |