முதல் ஐபிஎல் போட்டியிலேயே KKR அணியின் முதுகெலும்பை உடைந்த 23 வயது வீரர்! யார் இந்த அஸ்வனி குமார்?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட் வீழ்த்தியதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் வீரர் அஸ்வனி குமார் சாதனை படைத்தார்.
அஸ்வனி குமார்
வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில், மும்பை வீரர் அஸ்வனி குமார் (Ashwani Kumar) 3 ஓவர்கள் வீசி 24 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Debut straight out of a storybook 📖
— IndianPremierLeague (@IPL) March 31, 2025
The perfect first chapter for Ashwani Kumar 👌👌
Updates ▶ https://t.co/iEwchzDRNM#TATAIPL | #MIvKKR | @mipaltan pic.twitter.com/npaynbIViX
இதன்மூலம், அறிமுக ஐபிஎல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்திய 10வது வீரர் எனும் சாதனைப் பட்டியலில் இணைந்தார்.
அஸ்வனி குமார் பஞ்சாப் அணிக்காக இரண்டு ரஞ்சி டிராபி, 3 விஜய் ஹசாரே டிராபி மற்றும் 4 சையத் முஷ்டாக் அலி டிராபி ஆட்டங்களில் விளையாடி 3 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தவில்லை.
ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கேப்டன் ரஹானே, ரிங்கு சிங், மனிஷ் பாண்டே மற்றும் ரஸல் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |