ஒரு ரன்னில் அவுட் ஆன கோலி! பொறுப்புடன் ஆடி அரைசதம் விளாசிய அஸ்வின்
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 404 ஓட்டங்கள் குவித்துள்ளது.
முதல் டெஸ்ட்
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, சாட்டோகிராமில் தொடங்கியுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் கில் 20 ஓட்டங்களும், கேப்டன் கே.எல்.ராகுல் 22 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஏமாற்றிய கோலி
பின்னர் களமிறங்கிய விராட் கோலி ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 45 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் விளாசினார்.
அதன் பிறகு கூட்டணி அமைத்த புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். புஜாரா, ஷ்ரேயாஸ் அரைசதம் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த புஜாரா, டைஜூல் இஸ்லாம் பந்துவீச்சில் 90 ஓட்டங்களில் போல்டானார்.
அவரைத் தொடர்ந்து அக்சர் படேல் (14) ஆட்டமிழக்க, அரைசதம் கடந்த ஷ்ரேயாஸ் ஐயர் 86 ஓட்டங்களில் வெளியேறினார்.
அஸ்வின் பொறுப்பான ஆட்டம்
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் அஸ்வின் 58 ஓட்டங்கள் எடுத்தார். இது அவருக்கு 13வது டெஸ்ட் அரைசதம் ஆகும். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த குல்தீப் யாதவ் 40 ஓட்டங்கள் எடுத்தார்.
கடைசி விக்கெட்டாக சிராஜ் அவுட் ஆக, இந்திய அணி 404 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. வங்கதேச தரப்பில் டைஜூல், மெஹிதி ஹசன் தலா 4 விக்கெட்டுகளையும், எபாடட் ஹொசைன் மற்றும் காலித் அகமது தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
Crucial fifty from Ravichandran Ashwin ?#BANvIND | #WTC23 | ? https://t.co/ym1utFHoek pic.twitter.com/8fmhDOHzWs
— ICC (@ICC) December 15, 2022