இமாலய சாதனை படைத்த அஸ்வின்! மே.தீவுகளை தவிடுபொடியாக்கிய இந்திய அணி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இந்திய அணி டிக்ளேர்
டொமினிகாவில் நடந்த முதல் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் 150 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆடிய இந்திய அணி 421 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அதனைத் தொடர்ந்து 271 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் மேற்கிந்திய தீவுகள் 2வது இன்னிங்சை தொடங்கியது. அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் மிரட்டலான பந்துவீச்சினால் 130 ஓட்டங்களுக்கு மேற்கிந்திய தீவுகள் சுருண்டது.
Getty Images
இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அஸ்வின் 7 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அஸ்வின் இமாலய சாதனை
இந்த டெஸ்டில் அஸ்வின் மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் எனும் சாதனையை அவர் படைத்தார்.
707 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்த ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத் தள்ளி அஸ்வின் இரண்டாம் இடம் பிடித்தார். முதலிடத்தில் அனில் கும்ப்ளே 953 விக்கெட்டுகளுடன் நீடிக்கிறார் (டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 337 விக்கெட்டுகள்).
How good were these two in Dominica! ? ?#TeamIndia | #WIvIND pic.twitter.com/4D5LYcCmxB
— BCCI (@BCCI) July 15, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |