சிறந்த டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் தமிழக வீரர் அஷ்வின்
ஐசிசி வெளியிட்டுள்ள சிறந்த டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் தமிழக வீரர் அஸ்வின் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இரண்டு இந்திய வீரர்கள் முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர். ரவீந்திர ஜடேஜா 385 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
(File)
தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 341 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மேற்கிந்திய தீவுகளின் ஜேசன் ஹோல்டர்(336) 3வது இடத்தையும், வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன்(327) 4வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
(AP Photo)
5வது இடத்தில் 307 புள்ளிகளுடன் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உள்ளார். அவுஸ்திரேலிய வீரர்கள் மிட்செல் ஸ்டார்க்(291), பேட் கம்மின்ஸ்(263) முறையே 6 மற்றும் 7வது இடங்களில் உள்ளனர்.
நியூசிலாந்து வீரர் கிராண்ட்ஹோம்(243), இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ்(230), நியூசிலாந்து வீரர் ஜேமிஸன்(226) ஆகியோர் 8,9,10 இடங்களில் உள்ளனர்.