அஸ்வினுக்கு அடுத்த போட்டியில் இடம் உறுதி! ஓரங்கப்பட்டப்படும் அந்த ஒரு வீரர் யார் தெரியுமா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், அஸ்வினுக்கு இடம் கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நான்காவது டெஸ்ட் போட்டி, வரும் 2-ஆம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கான நட்சத்திர வீரர்களில் வரிசையில் அஸ்வின் இருந்தார்.
ஆனால், இந்த மூன்று போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், அஸ்வினுக்கு நான்காவது டெஸ்ட் போட்டியில் இடம் கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
ஏனெனில், ரவீந்திர ஜடேஜா தற்போது காயம் காரணமாக மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். அவர் அடுத்த போட்டியில் பங்கேற்பது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.
அப்படி அவர் உடல் தேறி வந்தாலும், மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் ஷர்மா கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அந்தளவிற்கு சிறப்பாக பந்து வீச வில்லை.
குறிப்பாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை அவரது ரன் அப்பிலும் சற்று தொய்வும், அவர் விக்கெட் வீழ்த்த திணறுவதும் தெரிகிறது.
இதன் காரணமாக ஜடேஜா அல்லது இஷாந்த் சர்மா ஆகிய இருவரில் ஒருவருக்கு பதிலாக அஸ்வின் நிச்சயம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.