டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த அஸ்வின்
டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 2 -வது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதனால், இரு அணிகளும் 1-1 என சமனில் உள்ளது. இந்நிலையில், 3 -வது டெஸ்ட் போட்டி இன்று ராஜ்கோட்டில் தொடங்கி நடந்து வருகிறது.
அஸ்வின் சாதனை
இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து அணியின் ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளை எடுத்து இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தற்போது, இரண்டாவது இடத்தில் அஸ்வின் உள்ளார்.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த அஸ்வினுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |