685 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாம்பவான் பின்னுக்குத் தள்ளிய தமிழக வீரர் அஸ்வின்!
டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனை தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன்
டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அவுஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸை, இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆண்டர்சன், இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் மட்டும் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதன்மூலம் 40 வயதான ஆண்டர்சன் 333 இன்னிங்ஸ்களில் 685 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் பெற்ற புள்ளிகள் 859 ஆகும்.
அஸ்வின் முதலிடம்
இந்த நிலையில், தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 864 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 8 விக்கெட்டுகளையும், இரண்டாவது டெஸ்டில் 6 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
@Sportzpics / BCC
@AFP Photo