திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! கெத்தாக வந்த தமிழக வீரர் அஸ்வின்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைந்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட 5-வது போட்டி வரும் ஜூலை 1-ஆம் திகதியன்று பர்மிங்காம் நகரில் துவங்குகிறது.
கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த விராட் கோலி தலைமையிலான இந்தியா 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆனால் 5-வது போட்டிக்கு முன்பாக கரோனா பரவல் ஏற்பட்டதால் அந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்டு இந்திய வீரர்கள் நாடு திரும்பினர். அந்த நிலைமையில் தற்போது நடைபெறும் அந்த தொடரின் கடைசி போட்டியில் விராட் கோலி பெற்றுக்கொடுத்த முக்கால்வாசி வெற்றியை புதிய கேப்டனாக கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா பினிஷிங் செய்து 2007க்கு பின் 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் வெற்றிக் கொடியை நாட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் அஸ்வின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டார். இதனால் இந்த போட்டியில் அஸ்வின் விளையாடுவாரா என கேள்வி எழுந்தது.
இந்த சூழலில் அஸ்வின் உடனடியாக இங்கிலாந்து புறப்பட்டுச் சென்று இந்திய அணியினருடன் இணைந்து கொண்டார். இதை பிசிசிஐ தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.