CSK அணிக்கு எதிராக வெறிகொண்டு விளையாடிய அஸ்வின்! வெளியான காரணம்
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெறிகொண்டு விளையாடியதற்கான காரணத்தை அஸ்வின் வெளியிட்டுள்ளார்.
அஸ்வின் கூறுகையில், சிஎஸ்கே எதிராக நான் பல ஆண்டு விளையாடி இருக்கிறேன். அப்படி இருக்கும் போது, நமது முன்னாள் அணிக்கு எதிராக விளையாடும் போது, இயல்பாகவே அவர்கள் முன் நாம் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நினைப்பு வருவது சகஜம் தான்.
சிஎஸ்கேவை வீழ்த்தியது மகிழ்ச்சி தான், அதுவும் இல்லாமல் அன்று 2 புள்ளிகள் கிடைத்தால் நாங்கள் முதல் 2 இடத்தை பிடிக்க முடியும். அதை மனதில் வைத்து கொண்ட விளையாடினேன்.
கடைசி வரை நின்று ஆட வேண்டும் என நினைத்தேன், அது தான் அன்றைய போட்டியில் ஆக்ரோஷமாக விளையாட காரணம் என கூறியுள்ளார்.
அவரை மாதிரி வீரரை CSK அணியில் எடுக்கனும்! இல்லேன்னா.. தோனி படையை எச்சரிக்கும் ஜாம்பவான்