பெண் நடுவருடன் அஸ்வின் வாக்குவாதம்! வீடியோ வைரல்
TNPL லீக் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் நடுவருடன் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
93 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
கோவையில் நேற்று நடந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன் அணிகள் மோதின.
தலைவன் டக்கர் டோய்! 😎🤝
— Star Sports Tamil (@StarSportsTamil) June 8, 2025
📺 தொடர்ந்து காணுங்கள் | TNPL 2025 | iDream Tiruppur Tamizhans vs Dindigul Dragons | Star Sports தமிழில் #TNPLOnJioStar #TNPL #TNPL2025 pic.twitter.com/CCqtykBWuC
முதலில் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் (Dindigul Dragons) அணி 93 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இசக்கிமுத்து 4 விக்கெட்டுகளும், மதிவண்ணன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய ஐட்ரீம் திருப்பூர் அணி 11.5 ஓவரில் 94 ஓட்டங்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துஷார் ரஹேஜா 39 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் விளாசினார். இப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணித்தலைவர் ரவிச்சந்திரன் அஸ்வின் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
நடுவருடன் வாக்குவாதம்
சாய் கிஷோர் பந்துவீச்சில் அஸ்வின் (Ashwin) எல்.பி.டபிள்யூ ஆனார். ஆனால் அவுட் இல்லை என்று அவர் நடுவர் கிருத்திகாவிடம் வாதிட்டார்.
Ash அண்ணா Not Happy அண்ணாச்சி! 😶🌫
— Star Sports Tamil (@StarSportsTamil) June 8, 2025
📺 தொடர்ந்து காணுங்கள் | TNPL 2025 | iDream Tiruppur Tamizhans vs Dindigul Dragons | Star Sports தமிழில் #TNPLOnJioStar #TNPL #TNPL2025 pic.twitter.com/Csc2ldnRS3
எனினும் நடுவர் கிருத்திகா தனது முடிவில் இருந்து மாறவில்லை. DRSவும் இல்லாததால் அஸ்வின் கோபத்தில் தனது காலில் துடுப்பை அடித்துவிட்டு சென்றார்.
அஸ்வின் பெண் நடுவருடன் வாதிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |