இந்த மாதிரி தூக்கி அடிக்கனும் தினேஷ் கார்த்திக்! விமானத்தில் பேட்டிங் டிப்ஸ் கொடுத்த அஸ்வின் வீடியோ
விமானத்தில் தினேஷ் கார்த்திக்கிற்கு அஸ்வின் பேட்டிங் டிப்ஸ்களை வழங்குவது போன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சமீபத்தில் புறப்பட்டு சென்றனர்.
உலகக்கோப்பை தொடர் ஆரம்பிக்கும் முன்னர் இந்திய அணி மேற்கு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்களான அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
Ash ????????? Anna. ?? pic.twitter.com/ROUyYqCFC3
— Rajasthan Royals (@rajasthanroyals) October 9, 2022
இதற்கிடையில், அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானத்தில் தினேஷ் கார்த்திக்கிற்கு அஸ்வின் சில பேட்டிங் டிப்ஸ்களை வழங்குவது போல் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.
அதில் இப்படியான ஷாட்களை தூக்கி அடிக்க வேண்டும் என்பது போல அஸ்வின் தினேஷ் கார்த்திடம் சொல்கிறார்.