ஹர்பஜன் சிங்கை முந்தி புதிய மைல்கல்லை எட்டிய அஸ்வின்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீர்ரகள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை முந்தி அஸ்வின் 3வது இடம்பிடித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 4வது நாளின் போது வில் யங் விக்கெட்டை கைப்பற்றிய 35 வயதான அஸ்வின், ஹர்பஜன் சிங்கின் (103 போட்டிகளில் 417 விக்கெட்) சாதனை சமன் செய்தார்.
இன்று ஐந்தாவது நாள் ஆட்டத்தின் போது 55வது ஓவரில் டாம் லதம் விக்கெட்டை கைப்பற்றிய அஸ்வின், ஹர்பஜன் சிங்கை முந்தி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறினார்.
அஸ்வின் தனது 80வது டெஸ்ட் போட்டிகளில் 419 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி அஸ்வின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில், அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
Stat Alert - With 418 wickets, @ashwinravi99 becomes India's third-highest wicket-taker in Tests.#TeamIndia pic.twitter.com/TRvelxZ1Wk
— BCCI (@BCCI) November 29, 2021
கபில் தேவ் 434 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்திலும், அஸ்வின் 419 விக்கெட்டுகளுடன் 3வது இடத்திலும், ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.
Thanks bhajju pa🙏
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) November 29, 2021
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் தன்னை முந்திய அஸ்வினுக்கு ஹர்பஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021