அஸ்வின் மாதிரி யார் பந்துவீசியும் நான் பார்த்ததில்லை! தமிழனை பாராட்டிய பிரபல ஜாம்பவான்
அஸ்வின் பந்துவீசிய விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது என அவரை ஜாம்பாவன் டேனியல் விட்டோரி பாராட்டியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
அஸ்வின் குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி, இதுபோன்ற மைதானத்தில் அஷ்வின் ஏகப்பட்ட வெவ்வேறு வகை வகையான பந்துகளை தொடர்ந்து வீசினார். தொடர்ந்து அவர் பந்து வீசிய விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஏனெனில் இது போன்று பந்து நின்று வரும் மைதானங்களில் அஷ்வின் மகிழ்ச்சியுடன் பந்து வீசுகிறார். அதுமட்டுமின்றி பேட்ஸ்மேன்களை எவ்வாறெல்லாம் தடுத்து நிறுத்த முடியுமோ அதற்கேற்றார்போல் விதவிதமாக பந்து வீசுகிறார்.
அவரிடம் இருக்கும் அனைத்து திறமைகளையும் வெளிக் காட்ட விரும்புகிறார். அந்தவகையில் இன்று அவர் வீசிய பந்துகளை போன்று மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் வீசி நான் பார்த்ததே கிடையாது. இந்த பாராட்டுக்கு அவர் தகுதியானவர் தான் என கூறியுள்ளார்.