அஸ்வினின் மாயாஜால பந்து! பந்தை கணிக்கமுடியாமல் போல்டான 21 வயது இளம் வீரர்: வெளியான வீடியோ
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில், அற்புதமாக பந்து வீசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு சென்ற இந்திய அணி, அப்படியே இங்கிலாந்திலே உள்ளதால், இந்திய வீரர்கள் ஓய்வில் உள்ளனர்.
ஆனால், அஸ்வினோ இதை வித்தியாசமாக பயன்படுத்தி வருகிறார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணி சார்பாக விளையாடி வருகிறார்.
? @ashwinravi99 gets his wicket!
— LV= Insurance County Championship (@CountyChamp) July 11, 2021
Watch Ashwin bowl here ? https://t.co/mz69ACW2wo pic.twitter.com/SlvYBWmkJ2
அதன் படி, 11-ஆம் திகதி துவங்கிய போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வரும், அஸ்வின் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இதுபோன்று கவுன்டி போட்டிகளில் விளையாடினால் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கு அது உதவும் என்ற காரணத்தினாலேயே தற்போது அந்த டெஸ்ட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார்.
இந்த போட்டியில் அஸ்வினின் பந்து வீச்சை எதிர் கொண்ட 21 வயது இளம் வீரர், அந்த பந்தை கணிக்க முடியாமல், போல்டாகி வெளியேறினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.