பந்தை கையில் வைத்து கொண்டு பராக்கு பார்த்த பவுலர்! ரன் அவுட்டில் இருந்து அஸ்வின் தப்பிய வீடியோ
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சாளரின் கவனக்குறைவால் ரவிச்சந்திரன் அஸ்வின் ரன் அவுட்டில் இருந்து தப்பினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக இந்திய இன்னிங்ஸின் இறுதியில் அஸ்வின் உடன் இணைந்து அதிரடியாக விளையாடினார் தினேஷ் கார்த்திக்.
ஓபேட் மெக்காய் வீசிய 18வது ஓவரில் ஒரு பந்தை தினேஷ் கார்த்திக் லாங் ஆஃப் திசையில் தட்டிவிட்டு இரண்டு ரன்கள் ஓடினார். இதில் இரண்டாவது ரன்னுக்கு அஸ்வின் டைவ் அடிக்க வேண்டியிருந்தது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அஸ்வின் 'ரீச்' ஆவதற்கு முன்பே பந்து ஃபீல்டரிடம் இருந்து ஸ்டம்ப் அருகே நின்றிருந்த பவுலர் ஓபேட் மெக்காய் கைக்கு வந்தது.
Lucky reprieve for Ravi Ashwin!
— OneCricket (@OneCricketApp) July 29, 2022
Brain-fade moment for Obed McCoy
Didn't dislodge the bails ?#INDvWI #WIvIND #T20I #RohitSharma #DineshKarthik #RishabhPant pic.twitter.com/2qZWH8VaUS
எளிதாக ரன்அவுட் செய்திருக்க வேண்டிய பந்து அது. ஆனால் அவரை அவுட் செய்யாமல் பந்தை கையில் வைத்திருந்தார் ஓபேட் மெக்காய். அப்போது அஸ்வின் வேகமாக ஓடிவந்து டைவ் அடித்து தன்மீது லேசாக மோதியபின்தான் சூழ்நிலையை உணர்ந்தார் மெக்காய். அதாவது, அஸ்வின் ஏற்கனவே ரீச் ஆகிவிட்டார் என்று தவறாகக் கணித்து ரன்அவுட்டை தவறவிட்டார் மெக்காய்.
இது தொடர்பான வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.