என்னை ஏன் லார்ட்ஸ் டெஸ்ட்டில் எடுக்கவில்லை? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஸ்வின்
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தான் ஏன் லார்ட்ஸ் டெஸ்ட்டில் இடம் பெறவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இந்திய அணியில் இடம் பெறவில்லை.
இதற்கு முன்பு, முதல் டெஸ்ட் போட்டியிலும் அவர் இடம் பெறாத காரணத்தினால், இது கோஹ்லியின் திட்டமிட்ட முடிவு, அவர் வேண்டும் என்றே அஸ்வினை புறக்கணித்து வருகிறார்.
லார்ட்ஸ் டெஸ்ட்டில் அஸ்வின் பல சாதனைகள் படைத்துள்ளார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் நான்கு பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது கடும் விமர்சனத்திற்குள்ளானது.
இந்நிலையில், இது குறித்த்து சந்தேகங்களுக்கு அஸ்வின் தற்போது பதில் அளித்துள்ளார். அதில், இரண்டாவது டெஸ்டில் நான் ஆடுவதாகத்தான் இருந்தது. அந்த போட்டியில், நான் ஆடுகிறேன் என சொல்லிவிட்டார்கள்.
நானும் ஆயத்தமான நிலையில், போட்டி துவங்குவதற்கு முன்பு திடீரென்று மழை பெய்துவிட்டதால், காலநிலைக்கு ஏற்ப 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதன் காரணமாகவே நான் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த தெளிவான பதில் மூலம் கோஹ்லி மற்றும் அஸ்வின் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்டு வந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது.