ஐசிசி டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை வெளியீடு! முதலிடத்தை நெருங்கிய அஸ்வின்.. ஜடேஜா சரிவு!
ஐசிசி டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர் அஸ்வின் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 5 இடங்களில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (903 ரேட்டிங்), ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (891 ரேட்டிங்), நியூசிலாந்தின் வில்லியம்சன் (879 ரேட்டிங்), ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன் (878 ரேட்டிங்), இந்தியாவின் ரோகித் சர்மா (797) ஆகியோர் தொடர்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (724 ரேட்டிங்) ஒரு இடம் முன்னேறி 9வது இடம் பிடித்துள்ளார்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் (908 ரேட்டிங்), 2-வது இடத்தில் அஸ்வின் (883 ரேட்டிங்) ஆகியோர் தொடர்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் (816 ரேட்டிங்) பட்டியலில் ஒரே இடம் முன்னேறி 3வது இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்தின் டிம் சவுதி (814 ரேட்டிங்) ஒரு இடம் சரிந்து 4வது இடத்தில் உள்ளார்.
5வது இடத்தில் பாகிஸ்தானின் ஷஹீன் அப்ரிடி (810) நீடிக்கிறார். தென் ஆப்பிரிக்காவின் ரபாடா (798) ஒரு இடம் முன்னேறி 6வது இடத்திலும், நியூசிலாந்தின் நீல் வாக்னர் ஒரு இடம் சரிந்து 7வது இடத்திலும் உள்ளனர்.
டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர்(382 ரேட்டிங்) நீடிக்கிறார்.
இந்தியாவின் அஸ்வின் (360) ஒரு இடம் முன்னேறி 2வது இடம் பிடித்துள்ளார், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸும் (348) ஒரு இடம் முன்னேறி 3வது இடம் பிடித்துள்ளார்.
R Ashwin moves up to the No.2 spot in the latest @MRFWorldwide ICC Men's Test Player Rankings for all-rounders.
— ICC (@ICC) December 8, 2021
Full list: https://t.co/vrogyWdn0u pic.twitter.com/RwPzCXd57J
இந்திய ஆல் ரவுண்டர் ஜடேஜா (346) இரண்டு இடம் சரிந்து 4வது இடத்தில் உள்ளார்.
வங்க தேசத்தின் ஷகிப் அல் ஹசன் 5வது இடத்தில் நீடிக்கிறார்.
அண்மையில் முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் மொத்தம் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர் நாயகன் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.