மிரட்டலான பந்துவீச்சில் வீழ்ந்த விக்கெட்டுகள்! புதிய சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின்
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
நான்காவது டெஸ்ட் போட்டி
அகமதாபாத்தில் நடந்து வரும் 4வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 480 ஓட்டங்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 180 ஓட்டங்களும், கேமரூன் கிரீன் 114 ஓட்டங்களும் விளாசினர்.
இந்திய அணியின் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
The ???-?????? we were all waiting for! ?#OneFamily #INDvAUS #BGT2023 @BCCI pic.twitter.com/Qp1pEhYxCV
— Mumbai Indians (@mipaltan) March 10, 2023
அஸ்வின் சாதனை
ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது அவர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 112 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
இதன்மூலம் அதிக விக்கெட்டுகளை அவுஸ்திரேலியாவுக்கு எதிராக வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அஸ்வின் மொத்தமாக 173 இன்னிங்சில் 473 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் 7 முறை 10 விக்கெட்டுகளையும், 32 முறை 5 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
@BCCI
@BCCI