டெஸ்டில் இமாலய சாதனையை படைத்த தமிழக வீரர் அஸ்வின்!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிவேகமாக 450 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
சுருண்ட அவுஸ்திரேலியா
நாக்பூர் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 177 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக லபுசாக்னே 49 ஓட்டங்களும், ஸ்டீவன் ஸ்மித் 37 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்திய அணியின் தரப்பில் மிரட்டலாக பந்துவீசிய ஜடேஜா, 11வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் தமிழக வீரர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அவர் அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை வீழ்த்தியபோது இமாலய சாதனை ஒன்றை படைத்தார். அதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 450 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் அஸ்வின் ஆவார்.
? Milestone Alert ?
— BCCI (@BCCI) February 9, 2023
4⃣5⃣0⃣ Test wickets & going strong ? ?
Congratulations to @ashwinravi99 as he becomes only the second #TeamIndia cricketer after Anil Kumble to scalp 4⃣5⃣0⃣ or more Test wickets ? ?
Follow the match ▶️ https://t.co/SwTGoyHfZx #INDvAUS pic.twitter.com/vwXa5Mil9W
சாதனை படைத்த அஸ்வின்
சர்வதேச அளவில் இந்த சாதனையைப் படைத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக 450 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அஸ்வின் தான்.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 3000 ஓட்டங்கள் மற்றும் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார்.
@AP Photo/Rafiq Maqbool