டி20 கிரிக்கெட்டில் இமாலய சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின்!
டி20யில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை அஷ்வின் படைத்துள்ளார்.
அஸ்வின் சாதனை
மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் 27 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Image: BCCI
300 விக்கெட்டுகள்
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை அஷ்வின் படைத்தார். அஸ்வின் 305 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அவருக்கு முன்பாக யுஸ்வேந்திர சஹால் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மேலும், இலங்கையின் ஜாம்பவான் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா சமன் செய்துள்ளார் அஷ்வின். இருவரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் 170 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.