இந்தி மொழி குறித்த கிரிக்கெட் வீரர் அஸ்வினின் கருத்து சரிதான்.., ஒப்புக்கொண்ட அண்ணாமலை
இந்தி மொழி தேசிய மொழி அல்ல என்று கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறிய கருத்து சரிதான் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை பேசியது
நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் தனியார் பொறியியல் கல்லூரியின் 23 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அஸ்வின் கலந்து கொண்டார். அப்போது, மாணவ மாணவியருக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், " தமிழ் ஓகே வா, ஆங்கிலம் ஓகே வா, ஹிந்தி ஓகே வா என மாணவர்களை நோக்கி கேட்ட போது தமிழுக்கு மட்டும் மாணவர்கள் ஆரவாரம் எழுப்பினர்.
அப்போது, மாணவர்கள் ஹிந்தி மொழிக்கு ஆதரவு தெரிவிக்காததால், ஹிந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி தான் என்று" கூறினார். இதனை கேட்ட மாணவர்கள் மீண்டும் சத்தத்தை எழுப்பினர்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " எனது அருமை நண்பர் அஸ்வின் சொன்னது மிகவும் சரியான ஒன்று தான்.
இந்தி ஒன்றும் நமது தேசிய மொழி அல்ல. அதை நானும் சொல்கிறேன். அது வெறும் இணைப்பு மொழி தான். இந்தியை தேசிய மொழி என்று நானும் எங்கும் சொன்னது கிடையாது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |