க்ளீன் பவுல்டு செய்த அஸ்வின்! நிதானத்தை இழந்து பேட்ஸ்மேனிடம் ஆக்ரோஷமாக கத்திய வீடியோ
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் அஸ்வின் திலக் வெர்மாவை க்ளீன் போல்ட் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் போட்டியில் ராஜஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் மும்பை வீரர் திலக் வர்மா அஸ்வின் பந்துவீச்சை சிக்சர்கள், பவுண்டரிகள் என விளாசி தள்ளினார்.
Ashwin’s Fierce Send off to Tilak Verma ?? pic.twitter.com/P2awA0TaOB
— SportsBash (@thesportsbash) April 2, 2022
ஆனால் அடுத்த சில பந்துகளில் அஸ்வின் பந்துவீச்சில் அவர் க்ளீன் பவுல்ட் ஆனார்.
இதையடுத்து நிதானத்தை இழந்த அஸ்வின் ஆக்ரோஷமாக திலக் விக்கெட்டை வீழ்த்தியதை கொண்டாடினார்.
அஸ்வினின் இந்த கொண்டாட்டத்தை ஒரு தரப்பு ரசிகர்கள் ஆதரித்தாலும், மற்றொரு தரப்பு ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.