நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரத்தை காலி செய்த அஸ்வின்! திணறும் வில்லியம்சன்: படைத்த மிகப் பெரும் சாதனை
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளாரான ரவிச்சந்திரன் அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி சவுத்தாம்டனில் கடந்த 18-ஆம் திகதி துவங்கியது. இதில் இன்றைய கடைசி நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 140 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் டாம் லாதம் மற்றும் டெவோன் கான்வே ஆகியோரை அஸ்வின் தன்னுடைய அற்புதமான பந்து வீச்சின் மூலம் அடுத்தடுத்து அவுட்டாக்கினார்.
It's Ashwin again ?
— ICC (@ICC) June 23, 2021
He traps Devon Conway in front of the stumps, who departs for 19.
?? are 44/2, needing 95 more runs to win. #WTC21 Final | #INDvNZ | https://t.co/sj0UdDLIrT pic.twitter.com/mQk2JUExsX
ஏனெனில் இதற்கு முந்தைய முதல் இன்னிங்ஸில் டெவோன் கான்வே அரைசதம் அடித்து, நியூசிலாந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். அவரை அவுட்டாக்கியதன் மூலம், நியூசிலாந்து அணி இப்போது திணறி வருகிறது.
குறிப்பாக அணியின் கேப்டன் வில்லியம்சன், இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார். சற்று முன் வரை நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 73 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
Most wickets in WTC 2019-21:
— CricTracker (@Cricketracker) June 23, 2021
Ravi Ashwin - 71*
Pat Cummins - 70
Stuart Broad - 69
Tim Southee - 56
Nathan Lyon - 56#Cricket #WTCFinal #INDvNZ #CricTracker
மேலும், அஸ்வின், இவர்களின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர்களின் வரிசையில் முதலிலிடத்தில் அஸ்வின் உள்ளார். இவர் 71 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்திலும், இவருக்கு அடுத்த படியாக, அவுஸ்திரேலியா அணி வீரர் பேட் கம்மின்ஸ் 70 எடுத்து இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.