கோஹ்லி கூறிய கருத்துக்கு எதிராக எழுந்த விமர்சனம்! நறுக்கென்று பேசி பதிலடி தந்த தமிழன் அஸ்வின்
விராட் கோஹ்லி கூறியதாக வெளியான கருத்து கடும் விமர்சனத்தை சந்தித்துள்ள நிலையில் அது தொடர்பில் அஸ்வின் நறுக்கென்று பேசியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முறையில் விராட் கோஹ்லி அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.
அதாவது, உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியை ஒரே ஒரு போட்டியின் மூலம் தேர்ந்தெடுப்பதில் கோஹ்லிக்கு உடன்பாடு இல்லை என்றும் வெற்றியாளரை தீர்மானிக்க 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
தோல்வியின் அடைந்துவிட்ட விரக்தியில் கோஹ்லி ஐசிசி மீது குற்றம் சாட்டுவதாகவும், அவர் கோரிக்கை வைப்பது போல் 3 போட்டிகள் கொண்ட இறுதி முடிவுகளை அமல்படுத்த முடியாது என்றும் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக வீரர் அஸ்வின் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், கோஹ்லி 3 போட்டிகள் கோரியதாக பேசப்படுவதை அறிந்தேன்.
ஆனால் அது முற்றிலும் தவறான செய்தி. போட்டி முடிந்த பிறகு அவரிடம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வேறு என்ன வித்தியாசம் செய்திருக்கலாம் என மைக்கேல் ஆதர்டான் கேட்டார்.
அவரின் கேள்விக்கு மட்டுமே கோஹ்லி 3 போட்டிகளாக நடைபெற்றிருந்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் அப்போதுதான் அணிகளின் பலம் தெரியும் என பதிலளித்தார். மற்றபடி எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என கூறியுள்ளார்.