இந்திய அணிக்கு திரும்பிய தமிழக வீரர் அஸ்வின்! 3வது டெஸ்ட் போட்டியில் மாற்றம் நிகழுமா?
குடும்ப அவசர நிலை காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.
குடும்ப அவசர நிலை காரணமாக விலகிய அஸ்வின்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இரண்டு நாட்கள் இந்திய அணிக்காக விளையாடிய தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்ப அவசர நிலை காரணமாக போட்டியில் இருந்து திடீரென விலகினார்.
இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த போட்டியின் 2வது நாளில் இங்கிலாந்து அணியின் ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்(Ravichandran Ashwin) டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்து இருந்தார்.
இந்திய அணிக்கு மீண்டும் திரும்பிய அஸ்வின்
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இணைந்துள்ளார்.
3வது டெஸ்ட் போட்டியின் 4வது நாளில் அஸ்வின் மீண்டும் இந்திய அணியில் இணைந்ததை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உறுதிப்படுத்தியுள்ளது.
அஸ்வின் மீண்டும் இணைந்திருப்பது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு தாக்குதலுக்கு வலு சேர்க்கும். அவரது துல்லியமான சுழற்பந்து வீச்சு இங்கிலாந்து துவக்க வீரர்களை நிச்சியம் சோதிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |